தமிழர் இன அழிப்பு தொடர்பில் அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ; விக்கிரமபாகு

vickramabahu-karunaratneயுத்தத்தில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பொது மக்களே கொல்லப்பட்டனர். தமிழர் இன அழிப்பு தொடர்பில் அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

மேலும், சர்வதேச விசாரணைகளை தடுக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை. மனித உரிமைகளை மீறிய ஜனாதிபதியினால் ஜெனீவா மாநாட்டில் முகம்கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் மக்கள் மீதான தொடர் அடக்குமுறைகளும் தாக்குதல்களுமே இன்று மனித உரிமை மீறல்களாக மாற்றமடைந்துள்ளது. யுத்த முடிவின் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்தினை உருவாக்கியிருப்பின் இன்று சர்வதேச அழுத்தங்கள் இலங்கையில் ஏற்பட்டிருக்காது. எனினும், இன்று வரையில் அரசாங்கம் இதனை உணராது தொடர்ந்தும் தமிழ், முஸ்லிம் மக்களைத் தாக்கி, அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆயினும் விடுதலைப் புலிகளை விடவும் பொதுமக்களே அதிகளவில் கொல்லப்பட்டனர். புலிகள் என்ற போர்வையில் அப்பாவி தமிழ் மக்களையே கொன்று குவித்துள்ளனர். எவ்வாறிருப்பினும் இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் 1இலட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் அளவில் கொல்லப்பட்டனர் என்பதே உண்மை. இதனை அரசாங்கம் ஒருபோதும் மறுக்க முடியாது.

இலங்கையில் தமிழர் இன அழிப்பு விடயத்தில் அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று ஓர் இனம் தனது ஆதங்கத்தினையும், துன்பத்தையும் சர்வதேச அளவில் கொண்டு செல்வ­ தற்கும் அரசாங்கத்தின் மிருகத்தனமான செயற்பாடுகள் காரணமாகும். அரசாங்கம் யுத்த வெற்றி என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இன அழிப்பு வெற்றியினையே கொண்டாடி வருகின்றனர்.

மேலும், சர்வதேச விசாரணைகளையும் ஜெனீவா தீர்மானத்தையும் தடுக்கும் சக்தியோ அல்லது எதிர்க்கும் அதிகாரமோ இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. அன்று அரசாங்கம் செய்த தவறினை இன்று அனைத்து நாடுகளும் ஆதாரங்களுடன் பார்த்துக்கொண்டிரு­ க்கி­ ன்ற­து. மனித உரிமைகளைச் செய்த அரசாங்கத்தினால் இனி ஜெனீவா மாநாட்டில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இனவாதத்தினைத் தூண்டி நாட்டில் தொடர்ந்தும் பிரிவினையினைத் தூண்ட அரசாங்கம் முயற்சிக்குமாயின் மக்களே அதற்கான தண்டனையை கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply