இலங்கைக்கு எதிராக மற்றுமொரு அறிக்கை

sri_lanka_flagவவுனியா மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கே தங்கியிருந்த தமிழ் மக்களைத் துன்புறுத்தியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டாக்’ என்ற அமைப்பே அந்த அறிக்கையை நேற்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு அனுப்பியுள்ளது.

இலங்கைக்கு ஒருபோதும் வருகை தந்திராத ஹென்ரிடா பிரிஸ்கோ எனும் ஐரோப்பிய நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் செயற்பாட்டாளரினால் இந்த அறிக்கை தாயரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு தமிழ் மக்கள் 10 ஆயிரம் பேருடன் தொடர்பு கொண்டு தகவல் பெற்றதாக பொய்யான தகவலையும் இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அறிக்கை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply