போதைப் பொருள் தொடர்பில் இலங்கையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா

un-flagபோதைப் பொருள் தொடர்பில் இலங்கையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. கடல் பகுதியில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படும் நபர்களுக்கு தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நடுக் கடலில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டால், கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான ஓர் சட்டத்தை உருவாககுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.குடிவரவு குடியகழ்வு அமைச்சு மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply