மட்டக்களப்பு பன்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு

Ma-sch-1மட்டக்களப்பு பன்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வியாழக்கிழமை பிற்பகல் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
Ma-sch-2

Ma-sch-3
வித்தியாலய அதிபர் பொ.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ம.அரியதாஸ், வலய பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், நாகர் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்களின் முயல் பாய்தல், தாரா நடை, எலி ஓட்டம், பெண்கள் தடை தாண்டல், ஓட்டம், அஞ்சல் ஓட்டம், பழைய மாணவர் ஓட்டம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நடுவர்களுக்கான சங்கீதக் கதிரை உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இல்லங்களுக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags: ,

Leave a Reply