ஐ.நா மனிதஉரிமைகள் சபையில், தென்கொரியாவின் ஆதரவு கோரி, இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதராக, அமைச்சர் பஸில் ராஜபக் சியோலுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.
சியோல் சென்றுள்ள அமைச்சர் பஸில் ராஜபக் நேற்று முன்தினம், அந்தநாட்டின் பிரதமர் சுங்யஹாங் வொன்னுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
தென்கொரியாவின் அபிவிருத்தி அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், இலங்கையின் பொருளாதார விருத்திக்கு பங்களிப்புச் செய்யு மாறும் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் சபையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற் கடிப்பதற்கான ஆதரவைக் கோரியே பஸில் ராஜபக் தென்கொரியா சென்றுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் வாக்களிக்கும் தகைமையைக் கொண்டுள்ள தென்கொரியா, கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
இதேவேளை இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரவுள்ள அமெரிக்காவின், இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் தற்போது தென்கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
















