முன்னர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வெற்று மார்புடன், மேலே காங்கிரஸ் கொடியைப் போர்த்தியபடி போஸ் கொடுத்த நடிகை தனிஷா சிங் தற்போது ராகுல் காந்திக்காக, காதலர் தின சிறப்பு போஸ் கொடுத்து மேலும் பப்ளிசிட்டியாகியுள்ளார்.
இப்பெல்லாம் ஏதாச்சும் ஏறுமாறாக அல்லது தாறுமாறாக செய்தால்தான் பிரபலமாக முடிகிறது. நடிகைகளும் சரி, பிரபலங்களும் சரி இப்படி ஏதாவது ஒன்றை பரபரப்பாக செய்து விட்டு பைசா செலவில்லாமல் பப்ளிசிட்டியைத் தேடிக் கொள்கிறார்கள்.
இந்த வரிசையில் நடிகை தனிஷா சிங், ராகுல் காந்தியைக் கையில் தூக்கிக் கொண்டு பப்ளிசிட்டி கிணற்றில் குதித்துள்ளார்.
முதலில் ராகுலை ஆதரித்து காங்கிரஸ் கொடியை தனது மார்பில் சுற்றிக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தியவர் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரோசாப்பூ உடையில், ராகுல் காந்தி போட்டோவுடன் போஸ் கொடுத்து உருக்கியுள்ளார்.
பாலிவுட்டில் சாதாரண நடிகையாக வலம் வருபவர் தனிஷா சிங். இவருக்கு திடீரென சுப்ரீம் பிரபலமாக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை.. விளம்பரத்தில் குதித்து விட்டார்.
முதலில் காங்கிரஸ் கொடியை தனது வெற்று மார்பில் சுற்றியபடி போஸ் கொடுத்த அவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இது என்று பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காதலர் தினத்தையொட்டி இன்னொரு பரபரப்பு போஸுடன் கிளம்பியுள்ளார்.
கீழே ரோஜாப் பூக்கள் கோக்கப்பட்ட ஆடையும், மேலே இரு இதயங்களைப் பொருத்தியபடியும் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார் தனிஷா சிங்.
கூடவே ராகுல் காந்தியின் படத்துக்குப் பக்கத்திலும் பெருமை பொங்க போஸ் கொடுத்து தனது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார் தனிஷா.
















