பேஸ்புக்கில் திருநங்கைகளும் இணையலாம்

facebook-kidsபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆண், பெண் மட்டுமல்லாது திருநங்கைகளும் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண், பெண் ஆகிய பாலினங்களை அடுத்து சுமார் 50 பாலினத் தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது பாலினமாகக் கருதப்படும் திருநங்கைகள் சமுதாயத்தின் பல்வேறு தளங்களிலும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக, கல்வியறிவு பெருகிவருவதால் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு பல இடங்களில் பெருகி வருகிறது.

திருநங்கைகளுக்கு கல்வி உள்ளிட்ட சமூக நிலைகள் வழங்கப்பட்டு வருவதை அடுத்து, சமூக வலைத்தளங்களும் அவர்களுக்கு இடம் அளிக்க முன்வந்துள்ளன. கூகுள் இணையத்தளம் ஏற்கனவே மூன்றாவது பாலினத்தை பட்டியலில் இணைத்தது.

தற்போது அந்த வரிசையில் பேஸ்புக்கும் சேர்ந்துள்ளது. அதன்படி, ஆண் பெண் மட்டுமல்லாமல் மூன்றாவது பாலினத்தையும் இணைத்துள்ளது. முதலில் இந்த வசதி அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு நேற்று முதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 பாலினங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்களது பாலினத்தை வாடிக்கையாளர்கள் சரியாகப் பதிவு செய்யலாம்.

எனினும், பாலினத்தை மறைத்துக்கொள்ள விரும்பினால் அதற்கும் தேர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வாடிக்கையாளர்களின் பிறந்தநாளின் போது ‘அவரது பிறந்தநாள்’, ‘அவளது பிறந்தநாள்’ என்று நண்பர்களுக்குச் செய்தி அனுப்பப்படும். திருநங்கையாக இருக்கும் பட்சத்தில், ‘அவர்களது பிறந்தநாள்’ என்று செய்தி அனுப்பப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களது சுய அடையாளத்தை நம்பிக்கையுடனும், குறிப்பாகவும் தரும் நோக்கிலேயே இந்த வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது.

Tags: , ,

Leave a Reply