மலேசியாவில், இஸ்லாமிய அமைப்பினரின் எச்சரிக்கையை மீறி, காதலர் தினமான நேற்று, 138 ஜோடிகளுக்கு, திருமணம் நடைபெற்றது.
மலேசியாவில், உள்ள, 2.8 கோடி மக்களில், 60 சதவீதம் பேர், முஸ்லிம்கள். இங்கு நடக்கும் குற்றங்களுக்கு, இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்கப்படுகிறது. கடந்த, 2011ல், காதலர் தினத்தை கொண்டாடிய, 100 இளைஞர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மலேசிய இஸ்லாமிய அமைப்பு விதித்த, தடையை மீறி, தலைநகர், கோலாலம்பூரில் உள்ள, ஒரு வழிப்பாட்டு தலத்தில், ஒரே மேடையில், 138 காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
மலேசியாவில் வசிக்கும், சீன மக்களின் சார்பில், இந்த கூட்டு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காதலர் தினத்தை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, செலாங்கோர் மாநிலத்தில், கடந்த வாரம், முஸ்லிம் அமைப்புகளின் சார்பில், துண்டு பிரசுரங்கள் வழங்கி, பிரசாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















