சேமமடுவில் மக்கள் சந்திப்பு

sem-vau-2வவுனியா சேமமடு மக்களுடன் சமகாலப் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி சந்தித்து கலந்துரையாடல்

வவுனியா வடக்கு, சேமமடு பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் சமகால அரசியல் நிலவரம் குறித்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் சேமமடு பிரதேச மக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை (14)சேமமடுவில் இடம்பெற்றுள்ளது.
sem-vau-1
இதன் போது அப் பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்கு தெளிவுபடுத்தியதுடன் சமகால அரசியலில் தாம் எவ்வாறு உள்ளோம் என்பதையும் கூறியுள்ளனர்.

இவ் விடயங்களினை கேட்டறிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியினாரால் மக்களுக்கு சில தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தமடிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக அதன் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் கோபாலகிருஸ்ணன், அக் கட்சியின் மனிதபிமான பிரிவைச் சேர்ந்த என்.ரஜீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply