இலங்கை இனப்படுகொலை புதிய காணொளி விரைவில் வெளிவரும் – வைகோ

vaiko2இலங்கைப் போரின்போது 15 தமிழ்ப் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்தது தொடர்பான புதிய காணொளி ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி விரைவில் வெளியிடுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

2009-ஆம் ஆண்டு இலங்கை போரின் உச்சக்கட்டத்தின் போது, ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது.

தமிழ்ப் பெண்கள் 15 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகின்றனர்.

இந்தக் கொடிய சம்பவம் சேனல்- 4 தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் இலங்கை அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply