தூங்கிக் கொண்டிருந்த முன்னாள் கணவர் முகத்தில், வெண்ணெயை தடவி, ரொட்டி சுடும் கருவியால் தாக்க முயன்ற பிரிட்டன் பெண் மீது, வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பிரிட்டனின், குளூசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள சின்டர்போர்டில் வசிப்பவர், ஜூலி ஆன் இவான்ஸ். இவரது முன்னாள் கணவர், ஜேம்ஸ் இவான்ஸ். விவாகரத்தான இவர்கள், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
ஜேம்ஸ் வீட்டில் இருப்பதை விரும்பாத ஜூலி, அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். வீட்டு வரவேற்பறையில் படுத்திருந்த, ஜேம்ஸ் மீது, தண்ணீரை ஊற்றி எழுப்ப முயன்றபோது எழுந்திருக்காததால், மறுநாள் காலை, அவரது முகத்தில் வெண்ணெயை தடவி, டோஸ்டரால் சுட முயன்றார் ஜூலி.
இதைத் தடுக்க முயன்ற ஜேம்சின் காதை, ஜூலி கிழித்ததால், 13 தையல்கள் போடப்பட்டன. இந்த இரு சம்பவங்களில், ஜூலி மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஜேம்ஸ், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
















