பிரேசிலில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – 60 இலட்சம் பேர் தவிப்பு

varadchiஇங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து அந்த நாடே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், பிரேசில் நாட்டில் பல மாதங்களாக மழை பெய்யாததால், கடும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்து ஆடிவருகிறது.

பிரேசிலில் உள்ள ஆறு, குளம் போன்றவை முற்றிலும் வற்றி, குடிநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள 11 மாநிலங்களை சேர்ந்த 142 நகரங்களில் வாழும் சுமார் 60 இலட்சம் மக்கள் ரேஷன் முறையில் தினமும் குடிதண்ணீரை பெற்று வருகின்றனர். தலைநகர் சாவ் பாலோவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

பிரேசிலில் தற்போது கோடை காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் கடும் வறட்சி காரணமாக தண்ணீரின்றி பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசு தீவிர நடவடிக்கை எடுத்து பிரேசில் மக்களின் தண்ணீர்த்தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply