அஞ்சான் படத்தில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, தனது அடுத்த படம் குறித்த முடிவை எடுத்துவிட்டார் என்றுதான் கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு. சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் வெங்கட்பிரபு.
கார்த்தி நடித்து வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி, வசூலில் தோல்வியடைந்த போதிலும், மீண்டும் அதே குடும்பத்தை சேர்ந்த சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் வெங்கட்பிரபு.
சமீப காலமாக சூர்யா, சீரியஸ் கேரக்டர்களிலே நடித்து வருகிறார். அதனால் ஒரு மாற்றம் தேவை என்று எண்ணி, முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார்.
அதனால் வெங்கட்பிரபு சொன்ன கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இந்த படத்தை அவரது 2டி நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
முழு திரைக்கதையையும் தயார் செய்து சூர்யாவிடம் காட்டி அனுமதியும் வாங்கிவிட்டார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் பிரேம்ஜி உள்பட அவரது வாடிக்கையான நடிகர்களும் உண்டு. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சு நடத்த உள்ளனர்.
பிரியங்கா சோப்ரா விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















