84 குடும்பங்களுக்கு தலா 40 பேர் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய மைதானத்தில் வைத்து வழங்கப்பட்டது

kani-ma-1மகாவலி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தெரிதென்ன மற்றும் ஜெயந்தியாய ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு தலா 40 பேர் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

ஜெயந்தியாய விவசாய சங்கத் தலைவர் ஏ.அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.றியாஸ், மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

Tags: , ,

Leave a Reply