படப்பிடிப்பில் பகிரங்கமாக சரக்கடிக்கும் ஐீவா?

jeeva2நடிகர் ஜீவா படப்பிடிப்பு தளத்தில், சிறிய இடைவெளி கிடைத்தாலும் பகிரங்கமாக சரக்கடிக்கிறாராம். இப்படியொரு தப்பை தினந்தோறும் அவர் செய்து கொண்டிருக்கிறாராம்.

‘மச்சி.. ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ என்று இவர் பேசிய சினிமா டயலாக்தான் டாஸ்மாக் பார்களில் குடிமகன்களின் கீதமாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஒரு காபி கப்பில் சரக்கை ஊற்றி, சூடான கிரீன் டீயை குடிப்பது போல் ஊதி ஊதி குடிக்கிறார். பார்ப்பவர்களுக்கு ஸார் கிரீன் டீ குடிப்பது போல் தெரியும். கப்பில் இருப்பதோ ஃபாரின் சரக்கு.

இப்படியாக சில ரவுண்டுகளை ஏற்றிய பிறகு, நடிப்பிலும் அநியாயத்துக்கு சொதப்புகிறாராம். ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி இயக்குநர்களையும் டென்ஷனாக்குகிறாராம். போதை அதிகமாகி ஒருவேளை ஜீவா மட்டையாகிவிட்டால், அன்றைக்கு படப்பிடிப்பு நடக்காது.

படப்பிடிப்பு இரத்தானால் தயாரிப்பாளருக்கு பல இலட்சம் நஷ்டமாகும் என்பதை எல்லாம் ஒரு தயாரிப்பாளரின் மகனான ஜீவாவுக்கு தெரியாமல் போனது எப்படி? என்பதே கோடம்பாக்கத்தில் உள்ள கேள்வி.

Tags: , ,

Leave a Reply