கர்ப்பிணியாக நயன் மறுக்கவில்லையாம்

simbu-nayanஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில், ‘நீ எங்கே என் அன்பே‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சேகர் காமுலா இயக்குகிறார். நயன்தாரா, ஹர்சவர்தன் ராணே, பசுபதி, வைபவ் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி சேகர் காமுலா நிருபர்களிடம் கூறியதாவது:

கணவனை தொலைத்துவிட்டு தேடும் கர்ப்பிணி பெண்ணின் கதைதான் இது. ஒரிஜினல் கதையில் இருந்த கர்ப்பிணி கேரக்டரை நான் மாற்றிவிட்டேன். கர்ப்பிணி என்பதன் மூலம் கிடைக்கும் அனுதாபம் இல்லாமலே படத்தை ஜெயிக்க வைக்க முடியும் என்று நம்பினேன்.

அதனால் இதில் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தார் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒரிஜினலில் நடித்த வித்யா பாலனை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார் நயன்தாரா. அவரின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும்.

நவராத்திரி விழா பின்னணியில் படம் நடக்கிறது. சென்டிமென்ட் திரில்லர் கதை. இவ்வாறு சேகர் காமுலா கூறினார். பேட்டியின் போது இசை அமைப்பாளர் மரகதமணி உடன் இருந்தார்.

Tags: , ,

Leave a Reply