வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியிருப்பவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வீசா காலம் பூர்த்தியானதன் பின்னர் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ அதேவிதமான நடவடிக்கை இலங்கையிலும் எடுக்க்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்போரை கண்டு பிடித்து அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் விடுதிகள் போன்றவற்றிற்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் கடவுச் சீட்டு பிரதி ஒன்றை அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில இந்தியர்கள் சுற்றுலா வீசாக்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் குறித்த இந்தியர்கள் வர்த்தக மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து வீசா காலம் காலவதியாகியும் தங்கியிருந்த பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா அல்லது அமெரிக்காவிற்கு வீசா பெற்றுக் கொள்வது மிகவும் கனடினமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வெளிநாட்டுப் பிரஜைகள் மிக இலகுவாக இலங்கைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக நடமாடுவதாகத் தெரிவித்தள்ளார்.
இந்த சுதந்திரத்தை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக பயன்படுத்திக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தில் ஈடுபட்டு குண்டுகளை தயாரித்தவர்கள் இன்று மனித உரிமைகள் பற்றி பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் நாட்டுக்கு எதிராக போலி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















