Platoon, The Wraith, Wall Street, Major League, Hot Shots போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகர் சார்லி ஷீன் , ஆபாச படத்தில் நடித்த ஒரு நடிகையை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இது இவருடைய நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சார்லி ஷீனுக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே 1995ஆம் ஆண்டு Donna Peele என்பவரையும், 2002 ஆம் ஆண்டு Denise Richards என்பவரையும், 2008ஆம் ஆண்டு Brooke Mueller என்பவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.
தற்போது அமெரிக்காவில் பல ஆபாச படங்களில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நடிகை Brett Rossi என்பவருடன் காதல் கொண்டுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவரும் ஹவாய் கடற்கரையில் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு கருத்து தெரிவித்த சார்லி ஷீன், தான் விரைவில் Brett Rossiஐ திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் Brett Rossi, இதுகுறித்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
















