இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது என்பதனை ஜெனீவா தீர்மானத்தில் அடையாளப்படுத்த வேண்டும்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானம்

Vau-meet-5இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது என்பதனை ஜெனிவாவில் கொண்டு வரப்படுகின்ற தீர்மானம் அடையாளப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்களும் அதனை எதிர்ப்பர் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நான்காவது வருடாந்த பொதுசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Vau-meet-1

Vau-meet-2

Vau-meet-3

Vau-meet-4

Vau-meet-6
தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் நான்காவது வருடாந்த பொதுசபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.2) இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜெனிவா எங்களுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் வர இருக்கின்ற தீர்மானம் தமிழ் தேசிய மக்கள் முன்னிணியும் தமிழ் மக்களும் ஆதரிக்க கூடிய தீர்மானமாக அமைவதற்கு முதலாவதாக தமிழினத்திற்கு இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை அடையாளப்படுத்த வேண்டும். அந்த இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அதனை அடையாளப்படுத்த வேண்டும். வெறுமனே போர்க்குற்றம் என்றும் அந்த போர் இடம்பெற்ற கடைசி மூன்று வருடங்களையும் விசாரிக்கும் வகையில் அந்த தீர்மனம் நிறைவேற்றப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்பதுவே எங்களுடைய கருத்தாகும்.

அடுத்த விடயமாக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை பிரித்தானிய அரசு இலங்கை தீவில் இருந்து வெளியேறிய காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் நடைபெறும் முழு விடங்களையும் விசாரணை செய்வதாக அது இடம்பெறவேண்டும். வெறுமனே கடைசி மூன்று வருடங்களையும் விசாரிப்பதாக இருந்தால் அத் தீர்மனத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இன அழிப்பை தமிழ் தேசத்தை இல்லாது ஒழிக்கின்ற இச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்ககூடியவகையிலே சர்வதேச சமூகத்தினுடைய பாதுகாக்கும் பொறுப்பை பயன்படுத்தி தமிழர் தாயக பிரதேசத்தில் சர்வதேச சமூகத்தினுடைய விசேடமாக ஐ.நாவினுடைய கண்கானிப்பிலே இடைக்கால நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் சிறிலாங்கா அரசுடன் பேச்சுவார்த்தையூடாக ஓர் தீர்வை எட்டுவதற்கு நாங்கள் ஓர் நியாயமான காலஅவகாசத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அந்த கால அவகாசத்திற்கு பிற்பாடும் இன்றைக்கும் செயற்படுகின்ற சிறிலங்கா அரசு தொடர்ந்தும் செயற்பட்டால் சர்வதேச சமூகத்தினுடைய நேரடி தலையீட்டின் பிரகாரம் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயக உரிமையின் அடிப்படையிலே ஓர் சர்வதேரச பொறிமுறையின் பிரகாரம் எங்களுடைய மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகள் என்ன என்பதனை அறியக்கூடியவகையிலே பொறிமுறை யொன்றை உருவாக்கி நிரந்தர தீர்வை தமிழ் மக்கள் தீர்மானிக்க கூடிய வகையில் சர்வதேச சமூகம் திட்டமொன்றை அமைக்க வேண்டும் என தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை இப் பொதுச்சபைக் கூட்டத்திற்கு முன்னதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்சபை கூட்டமை; அதன் தலைவர் வி.ஆனந்தராஜா தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply