ஸ்ரீதேவியை தேடி காமெடி மற்றும் குடும்பப்பாங்கான பட வாய்ப்புகள் வருகிறதாம்.
திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு ஸ்ரீதேவி பல காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தான் அவர் கௌரி ஷிண்டேவின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
ஹீரோ ரேஞ்சுக்கு தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே 50 வயதாகும் ஸ்ரீதேவி விரும்புவதாகக் கூறப்படுகிறது
ஸ்ரீதேவியும், அவரது கணவரும், இந்தி பட தயாரிப்பாளருமான போனி கபூரும் இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம். சரியான இயக்குனர் படத்தை தேர்வு செய்து அவர் நடிப்பாராம்.
குடும்ப ரசிகர்கள் ரசிக்கும்படியாகவும்,தனக்கு அருமையான கதாபாத்திரம் உள்ளதாகவும் இருக்கும் படத்தில் நடிக்கவே ஸ்ரீதேவி விரும்புவதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களை அவரது கணவர் போனிஜி தயாரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
















