பாலுமகேந்திரா வுக்கு தீராத அவமானத்தைத் தேடித்தந்த பாலா…!

balumahendraஅண்மையில் மறைந்த பாலுமகேந்திரா மிகச்சிறந்த படைப்பாளி, படிப்பாளி!

ஒளிப்பதிவில் அவர் ஒரு மேதை.

திரைப்பட இயக்குநராகவும் பாலுமகேந்திரா நிகழ்த்திய சாதனைகள் அபரிமிதமானவை.

உலகத்தரமான ஒளிப்பதிவுக்கும், இயக்கத்துக்கும் அவரே உதாரணமானவர்.

– என்றெல்லாம் காலாகாலத்துக்கும் பேசப்பட வேண்டிய பாலுமகேந்திராவை ‘மூணு பொண்டாட்டிக்காரர்’ என முகச்சுழிப்போடு மக்களை முணுமுணுக்க வைத்துவிட்டார் பாலா.

1939 – ஆம் ஆண்டு பிறந்த பாலுமகேந்திராவுக்கு ஏற்கனவே அகிலா என்ற மனைவி இருக்கும்போதே, 1978 ல் நடிகை ஷோபாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அப்போது பாலுமகேந்திராவுக்கு வயது – 40.

அப்போது ஷோபாவுக்கு வயது – 16. (ஷோபா பிறந்தது 1962 ஆம் ஆண்டு).

பாலுமகேந்திராவைவிட 23 வயது குறைவான ஷோபா, திருமணமான இரண்டே ஆண்டுகளில் – 1980 ல் – தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஷோபாவுக்குப் பிறகு பாலுமகேந்திராவின் படங்களில் நடித்த அர்ச்சணா, ஈஸ்வரி ராவ், மௌனிகா, வினோதினி போன்ற நடிகைகளும் பாலுமகேந்திரா உடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டாலும், மௌனிகா உடனான உறவு மட்டுமே சில வருடங்களுக்கு முன் அம்பலமானது.

வண்ணவண்ணப்பூக்கள் படத்தில் நடித்தபோது பாலுமகேந்திராவுக்கும் மௌனிகாவுக்கும் ஏற்பட்ட உறவு, சுமார் 8 ஆண்டுகள் ரகசியமாக நீடித்தநிலையில், 2000 ஆம் ஆண்டில் மௌனிகாவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் பாலுமகேந்திரா.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகைப் பேட்டியில் மௌனிகாவை தன் மூன்றாவது மனைவி என்று அறிவித்ததோடு சரி. அவரை எந்தவொரு பொதுநிகழ்ச்சிக்கும் பாலுமகேந்திரா அழைத்துச் சென்றதில்லை.

எனவே, பாலுமகேந்திரா – மௌனிகா உறவு பலருக்கும் தெரியாத, பாமர மக்கள் அறியாத விஷயமாகவே இருந்தது.

தன்னைவிட 23 வயது குறைந்த நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா இரண்டாவது திருமணம் செய்ததும், திருமணமான இரண்டாவது வருடமே ஷோபா தூக்கில் தொங்கியதும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு தெரியாத செய்தியாக இருந்தது.

சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கோ ஷோபாவின் மணமும், மரணமும் மறக்கப்பட்ட சம்பவங்களாக இருந்தன.
இந்த விஷயங்களை எல்லாம் இப்போது கிளறிவிட்டுவிட்டார் இயக்குநர் பாலா.

பாலுமகேந்திராவின் சிஷ்யன் என்ற கோதாவில், அவரது மறைவு தினத்தில் சண்டியராக மாறினார் பாலா.

பாலுமகேந்திராவின் உடலை மௌனிகாவைப் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்றார்.

இந்த விஷயங்கள் எல்லாம் ஊடகங்கள் மூலம் மக்களைச் சென்றடைய…

பாலுமகேந்திராவின் கடந்த கால வாழ்க்கை விவாதப்பொருளாகி….

திரைப்படக் கலைஞராக அவர் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் மறக்கப்பட்டு, ‘சிறு வயசுப்புள்ளைகளை கல்யாணம் கட்டிக்கிட்ட மூணு பொண்டாட்டிக்காரரக’ மட்டுமே டீ கடை பெஞ்சுகளில் பேசப்படுகிறார் பாலுமகேந்திரா.

பாலுமகேந்திராவுக்கு தீராத அவமானத்தைத் தேடித்தந்துவிட்டார் பாலா…!

Tags: ,

Leave a Reply