பொருளாதாரத் தடைகளுக்காக அஞ்சப் போவதில்லை – அரசாங்கம்

Nimal-Siripala-de-Silvaபொருளாதாரத் தடை குறித்த எச்சரிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அழுத்தங்களின் அடிப்படையில் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை விதித்தால் அதற்காக அடி பணியப் போவதில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழுத்தங்களுக்காக அடிபணிந்து செயற்பட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்க்க அனைவரும் அணி திரள வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply