ஊழல் நிறைந்த இத்தாலியை புதிய ஆட்சியாளர் மறுசீரமைப்பார் – 54% மக்கள் நம்புகின்றனர்:-

italy5அரசியல் வாதிகளின் கடும் ஊழல் மலிந்த 64 அரசாங்கங்கள், 69 ஆண்டுகளில் இத்தாலிய நாட்டுப் பொருளாதாரத்தைத் தீர்க்க முடியாத சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.

இத்தாலியின் அரசியல் அமைப்பைக் கொண்ட ஏனைய ஐரோப்பிய நாடுகளாகிய ஜேர்மன், இந்தக் காலப் பகுதியில் எட்டு முதல்மந்திரிகளைக் கொண்ட அரசாங்கங்களையும், இங்கிலாந்தும், கொ(H)லண்டும் முறையே பதினாறு, பதினான்கு அரசாங்கங்களையும் அமைத்திருந்தன.

இத்தாலி அரசியலில் மிகவும் நீண்ட கால ஆட்சியில் சில்வியோ பெலுஸ்கோனி இருந்ததாகவும், இவரின் ஆட்சிக்காலம் மொத்தமாக 9 வருடம் 149 நாட்களென்றும் அரசியற் செய்திகள் கூறுகின்றன.

சென்ற காலங்களில் ஆளும் அரசியற் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் இத்தாலியின் முதல் மந்திரி நப்போலிரானோ பதவியை ராஜினாமா செய்து கொள்ள, 39 வயது நிறைந்த மற்றியோ றென்ஸிற்கு மந்திரி சபையை அமைக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இவர் ருஸ்கனி (Tuscany) மாநிலத்திலுள்ள லோரன்ஸ் மாகாண ஆட்சியாளராக 2009 இல் பதவியேற்று, ஊழலற்ற அரசியல் முறைமையைக் கடைப்பிடித்தவராவர். மிதவாதக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியல் பாதையை வகுக்கப்போவதாகவும், அரசாங்க செலவீனங்களைக் கடுமையாகக் குறைத்து, ஊழலிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தொன்பது வயதில் அரசியலில் ஈடுபட்ட சட்டதரணியான இவரின் வருகை இத்தாலியில் புதிய அரசியல் மலர்ச்சிக்கு வழி வகுக்குமென 54 சதவீத இத்தாலியர்கள் நம்புகின்றனர்.

Tags: , ,

Leave a Reply