
இலங்கைகான உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ள
இலங்கைக்கு உதவி வழங்குவதற்காக மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காக 500 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் கூடுதலான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செலவுகளுக்காக 14130 கோடி இந்தியா ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 8335 கோடி இந்திய ரூபா, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெளிநாடுகளுடான உறவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
















