இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜியாஃப்ரே(60) என்பவருக்கு அந்நாட்டு அரசு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.
அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறி சில ஆண்டுகளாக அவரது மனைவி ரெபேக்கா ஸ்டர்டி ஓய்வூதியத்தை பெற்று வந்தார்.
எனினும், கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஜியாஃப்ரே யார் கண்களிலும் தென்பட்டதில்லை என்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அவரது ஓய்வூதிய கணக்கில் இருந்து 57 ஆயிரம் பவுண்டுகள் மனைவியின் கணக்குக்கு கைமாறியதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, சந்தேகமடைந்த ஓய்வூதிய துறையின் புனாய்வு படையினர் இரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
இயற்கையான முறையில் கணவர் இறந்ததும் அதிர்ச்சியடைந்த ரெபேக்கா, இந்த தகவல் வெளியே தெரிந்தால் அரசு அவருக்கு வழங்கும் உதவித்தொகை நின்று போய்விடுமே… என கலக்கமடைந்தார்.
குடும்பத்தின் முக்கிய வருமானம் அரசு வழங்கும் உதவித்தொகை மட்டும்தான் என்ற நிலையில் அதை இழக்க விரும்பாத அவர் ஒரு திட்டம் தீட்டினார்.
அந்த திட்டத்தின்படி, நண்பர்கள் இருவரின் உதவியுடன் ஜியாஃப்ரேவின் பிணத்தை வீட்டு தோட்டத்தில் இரகசியமாக புதைத்து விட்டார் என்பது இந்த விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் இறந்துபோன நபர் உயிருடன் இருப்பதாக நாடகமாடி, அரசுப் பணத்தை அபகரித்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்
















