பயங்கரமா பில்டப் பண்ணுவாங்க, ஆனா சம்பளம் தர மாட்டாங்க : தயாரிப்பாளர்களின் முகத்திரையை கிழித்த பவர்ஸ்டார்!

Powerstar-Srinivasanஇந்த சினிமாவுல நான் எந்தளவுக்கு ஏமாந்துருக்கேன்னு நெறைய அனுபவங்கள் எனக்குள்ள இருக்கு. அப்படித்தான் ‘கோலிசோடா’ படத்துல நடிக்கக் கூப்பிட்டுட்டு கடைசியில பேசின சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என புகார் கூறினார் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்.

‘இன்றைய சினிமா’ படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று காலை சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் பேசியதாவது :

இந்த சினிமாவுல நான் எந்தளவுக்கு ஏமாந்துருக்கேன்னு நெறைய அனுபவங்கள் எனக்குள்ள இருக்கு.

புதுசா வர்றவங்க சினிமாவுல ஜாக்கிரதையா இருக்கணும். சினிமாவுல படம் எடுக்கப் போறோம்னு முதல்ல புரொடியூசர் நம்மகிட்ட வந்து பேசுவாரு. கூடவே டைரக்டரும் வந்து நீங்கதான் சார் இந்தப்படத்துல நடிக்கணும். ஆஹோ ஓஹோம்பாங்க. நாமளும் சரி நம்மளை புகழ்ந்து பேசுறாங்களேன்னு நடிப்போம்.

நடிச்சி முடிச்ச உடனே அந்தப்படம் ஹிட்டாயிடுச்சுன்னா அந்தப் படத்துல நம்மளோட பேரையும் போடமாட்டாங்க. போஸ்டர்ல பேரும் போடமாட்டாங்க. பப்ளிசிட்டியும் பண்ண மாட்டாங்க. கேட்டா படம் வெற்றிப்படம்னு சொல்வாங்க.

இப்போ லேட்டஸ்ட்டா ‘கோலிசோடா’ங்கிற படம் ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. அதுல நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். அந்த சாங்கை சார் 6 நாள் ஷூட் பண்ணப் போறோம். இதுல கண்டிப்பா நீங்க நடிக்கணும், நீங்க நடிச்சாத்தான் ஹிட்டாகும். ரொம்ப கஷ்டப்பட்டு எடுக்கிறோம். நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லி ரொம்ப அன்பா கூப்பிட்டாங்க.

நானும் போனேன். 6 நாட்கள் சாங்குன்னு சொல்லிட்டு மூணு நாள் தான் அதை எடுத்தாங்க. மூணு நாள் கட் பண்ணிட்டாங்க. ஆனா பேசினபடி சம்பளத்தை எனக்கு குடுக்கல. கேட்டாக்கா உன்னால முடிஞ்சதப் பாருன்னு சொன்னாங்க. அந்த மாதிரி ஏமாற்றத்தோட தான் அந்தப் படத்துல நடிச்சி முடிச்சேன். அந்தப் படத்துல நடிச்சதுக்காக இப்போ நான் ரொம்ப வருத்தப்படுறேன்.

அந்த மாதிரி புதுசா யார் படம் எடுக்க வந்தாலும் என்னை மாதிரியான நடிகர்களை யாரும் ஏமாத்தாதீங்க. ஆனா வெளியில கேட்டா நான் தான் எல்லாரையும் ஏமாத்துறேன்னு சொல்றாங்க.

நம்மகிட்ட ஒரு காரியம் ஆகணும்னா பயங்கரமா பில்டப் பண்ணுறாங்க. இப்படித்தான் ‘யா யா’ படத்துலேயும் உங்களுக்கு 11 கெட்டப் சார், நீங்க கண்டிப்பா நடிக்கணும் சார். அப்படி சார், இப்படி சார்ன்னு சொன்னாங்க. அப்படியே என்கிட்ட புல்லா வேலை வாங்கிட்டு கடைசியில ஒருபிட்டு போஸ்டர்ல கூட என்னோட போட்டோவை போடல. அந்தப்படம் ஹிட்டும் ஆகல.

இதை ஏன் நான் சொல்றேம்னா என்னை மாதிரி புதுசா வர்ற நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர்களும், டைரக்டர்களூம் ரொம்ப ஏமாத்துறாங்க. தயவு செஞ்சு இனிமே அப்படி பண்ணாதீங்க. எல்லாரும் அப்படி இல்ல. ஒரு சில தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் இப்படி இருக்காங்க. நான் யாரையும் நம்பி இந்த சினிமாவுக்கு வரல. என்றார் பவர்ஸ்டார்.

Tags: , ,

Leave a Reply