காட்டு யானைகள் மற்றும் மனித முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலான விஷேட கூட்டம்

ma-ele-2மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் தங்கிநிற்கும் காட்டு யானைகளை ஒருவார காலப் பகுதிக்குள் வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ma-ele-4

ma-ele-5
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மின்சார வேலிகள் அமைப்பதற்காக தலா ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெற்றுவரும் காட்டு யானைகள் மற்றும் மனித முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலான விஷேட கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்

மாவட்டச் செயலாளர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசங்கம், இரா.துரைரெட்னம், பிரசன்னா இந்திரகுமார்;, பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் வன விலங்குத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவிலங்குகள் காரியாலயம் இல்லாததால் உடனடியாக இரண்டு அலுவலகங்களை அமைக்க அதிகாரிகள்உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் தற்சமயம் அம்பாறை வனவிலங்குகள் காரியாலத்துடன் இணைந்ததாக பணியாற்றும் சிங்களமொழி பேசும் அதிகாரிகளுக்குப் பதிலாக உடனயாக அமுலுக்கு வரும் விதத்தில் தமிழ்பேசும் அதிகாரிகளை நியமிக்கப்பட வேண்டும்.

காட்டு யானைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும், வீடழிப்புக்கும் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கும் உடனடியாக இழப்பீடுகளை உடனடியாக வழங்கப்படும இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.

மேலும் தற்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் தங்கி நிற்கும் காட்டு யானைகளை அடுத்த ஒரு வார காலத்திற்குள் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கையெடுக்கப்படும் இதனை மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்டைத்துள்ளோம்’ என்றார்.

Tags: ,

Leave a Reply