பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுவதனை சில பாராளுமன்ற உறப்பினர்கள் விரும்பவில்லை என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பியோ தொலைக்காட்சி என்ற செய்மதி தொலைக்காட்சிச் சேவையில் இலங்கையின் பாராளுமன்ற அமர்வுகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்தது.
சில பாராளுமன்ற உறுப்பினர்களின் அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நடவடிக்கையை குறித்த தொலைக்காட்சி அலைவரிசை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
பாராளுமன்றில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் சில பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளனர்.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளதாக சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் குறித்த ஊடக நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு மீண்டும் நேரடி ஒளிபரப்புக்களை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.
சபாநாயகர் நியூசிலாந்திற்கு விஜயம் செய்திருந்த போது, நேரடி ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
















