ஜெயலலிதாவை பாராட்டிய கருணாநிதி

karunanidhi3ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நிரூபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

கேள்வி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.

கேள்வி: தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?

பதில்: இது துரித முடிவு அல்ல. 2011ம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான் தெரிவித்த போது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

கேள்வி: தமிழக அரசே விடுவித்திருக்கலாமே, மத்திய அரசுக்கு அனுப்புவது அவசியமா?

பதில்: அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால், இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!

கேள்வி: கால தாமதம் ஏற்பட்டதற்காக, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறதே?

பதில்: அதைப்பற்றி யாரும் எங்களிடம் பேசவில்லை. அதனால் நாங்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. அப்படியொரு கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Tags: , ,

Leave a Reply