குறைந்த விலையில் படம் பார்க்க வேண்டுமா? இதோ அம்மா திரையரங்கம்

jayalalithaஅம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் உள்ளிட்டவை கட்டப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார்.

அம்மா திரையரங்குகளில் சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அந்த திரையரங்குகளில் மக்களுக்கு மலிவு விலையில் டிக்கெட் வழங்கப்படுமாம்.

மேலும் சென்னை நகர சாலைகளுக்கு இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சாலைகளின் பெயர்களை மாற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply