நுவரெலியா – ராகலை டீ.பிரிவு தோட்ட லயகுடியிருப்பு ஒன்றில் வீட்டின் சமயலறைப் பகுதியில் கடந்த 16ம் திகதி (16.02.2014) இரவு 11.00 மணியளவில் விண்கல் ஒன்று விழுந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் சென்று பார்த்தபோது வீட்டின் சமயலறைப் பகுதி தீ பற்றி எரிந்துள்ளது.
டீ.எம். கருணாரத்ன என்பவரின் வீட்டிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விண்கல்லை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக ராகலை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து பொலிஸார் உடனடியாக குறித்த வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இது விண்கல்லா? அல்லது வேறேதும் பொருளா? என அறிய நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி பேராதெனிய மற்றும் மொரட்டுவ பல்கலைகழகத்தில் விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு இதைபற்றி அறிவித்துள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அதனையடுத்து விஞ்ஞான ஆய்வாளர்கள் குறித்த இடத்தில் இருந்து கற்களின் சிதைவுகளை எடுத்து பரிசோதனைக்குட்படுத்தினர்.
பரிசோதனையின் பின் விழுந்தது விண்கல் தான் என பேராதெனிய மற்றும் மொரட்டுவ பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
















