நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சி: நாமல் குற்றச்சாட்டு

Namal_Rajapaksa3நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்திற்கு தேவையான வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.

மீளவும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

உலகில் எந்த சக்தியினாலும் தோற்கடிக்க முடியாது எனக் கூறப்பட்ட போரை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்தார். பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டதனால் சில நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.

இந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் பல்வேறு சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிapy; எவரும் எஞ்சப் போவதில்லை என நாமல் ரஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தறை கம்புறுகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply