கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம சேவகர் பிரிவுகளில் தமிழ் பெண்களை இராணுவத்தில் இணையுமாறு இளங்கலை இராணுவத்தினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பரப்புரைகளை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.
அந்த சுவரொட்டியில் கீழ் வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உங்கள் சொந்த பூமியில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
இலங்கை இராணுவத்தின் மகளீர் படைப்பிரிவில் நீங்களும் இராணுவ வீரராகலாம்.
நீங்கள் 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
நல்ல உடல் கட்டு உடையவராக இருக்க வேண்டும்.
உயர்தரம் வரை கல்வி கற்றிருக்க வேண்டும்.
உணவு, தங்குமிடம், மருத்துவம், பிரயாணம் ஆகியன இலவசம், நெருங்கிய
குடும்பத்துக்கும் மருத்துவம் இலவசம்.
சம்பளம்30000/=
மற்றும் தொடர்புகளுக்குரிய தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் சிலர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் நாம் அறிந்ததே.
வேலைவாய்புகள் இல்லாத இம்மக்களிடையே ஆண்கள் இருக்கும் போது, தனியே பெண்களை மட்டும் இராணுவத்தில் இணைப்பது மக்களிடையே பயத்தையும் சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.
– See more at: http://onlineuthayan.com/News_More.php?id=660482664720391037#sthash.v4RfIea7.dpuf
















