ஓடும் காரில் பெண் கற்பழிப்பு: 4 பேரின் வெறிச் செயல்

car-driverஉத்தரபிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க நேற்று காசியாபாத் நகருக்கு வந்தார்.

காசியாபாத் மாவட்ட கோர்ட்டில் வக்கீலை சந்தித்த பிறகு மீரட்டுக்கு திரும்பி செல்வதற்காக மாவட்ட போலீஸ் அதிகாரி அலுவலக வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் காத்திருந்தார்.

அப்போது அந்த பெண்ணின் அருகில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய அறிமுகமான நபர் அவரிடம் நலம் விசாரித்தார்.

சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் தனது கஷ்டத்தை எல்லாம் அவரிடம் கூறி, ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தந்தால் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

’லோனி பகுதியில் இருக்கும் என் நண்பர் ஒருவர் வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னார். என்னுடன் வந்தால் அந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறிய அந்த நபர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

சிறிது தூரம் சென்றதும் அதே காரில் மேலும் 3 பேர் ஏறினர். அவர்கள் காரின் பின் இருக்கையில் அந்த பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தனர்.

கார் நகர எல்லையை கடந்து சென்ற போது அவர்கள் 4 பேரும் அந்த பெண்ணை ஓடும் காரிலேயே சுமார் ஒரு மணி நேரத்துக்கு கற்பழித்து விட்டு, கோவிந்தாபுரம் அருகே இறக்கி விட்டு மின்னல் வேகத்தில் பறந்து, மறைந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து,அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags: , ,

Leave a Reply