ரயிலில் பாலியல் அத்துமீறல் புரிந்த இந்தியருக்கு சிறை

aresstஇந்தியாவை சேர்ந்த ஜெயராமன் கண்ணன் என்ற வாலிபர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் சிங்கப்பூர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அவர், தனக்கு முன்னால் நின்றிருந்த 19 வயது பெண்ணின் இடுப்பு பகுதியை ஒட்டியவாறு நின்று பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்தார்.

அவரது இம்சையை ஒரு கட்டத்துக்கு மேல் சகித்துக் கொள்ள முடியாத அந்த பெண் கூச்சலிட்டபடி ஜெயராமன் கண்ணனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அவருக்கு ஆதரவாக வந்த இதர பயணிகள் குறும்பு செய்த வாலிபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் ஜெயராமன் கண்ணனுக்கு 4 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

சாதாரணமாக இதுபோன்ற தவறுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடமிருந்தாலும், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply