முகப்புத்தகம் :அச்சுறுத்தல்களுக்கு விரைவில் தீர்வு

facebook-ownerமாணவர்களை பாடசாலையிலும் மற்றும் வெளி இடங்களிலும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனால் முகப்புத்தகம் போன்ற சமூகத்தை சீரழிக்கும் இணையத்தளங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உரிய தீர்வுகளை வழங்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் அதிபர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பெற்றோர்களை இணைத்து பாடசாலை மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்

இதன் மூலம் பாடசாலைகளிலும் வெளியிடங்களிலும் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதை தடுப்பதுடன் மாணவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பாடசாலையின் முதலாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply