தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகக் காரணம் கூறி, தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று காலை தமிழக முதல்வரை தனது குடும்பத்தாருடன் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அவைத் தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து திடீரென்று விலகினார்.
இந்த நிலையில், இன்று பண்ருட்டி ராமசந்திரன் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு பேரறிஞர் அண்ணா விருது வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்த பண்ருட்டி ராமசந்திரன் இந்த விருது நான் சற்றும் எதிர்பாராதது. இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டு இருப்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது எனக்கு ஜெயலலிதா அளித்த பொங்கல் பரிசாகவே கருதுகிறேன் என்று பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் தான் இன்று பண்ருட்டி ராமசந்திரன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தனது குடும்பத்தாருடன் நேரில் சந்த்தித்து அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















