மன்னாரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள்; இன்றும் ஐந்து மீட்பு

Mannar-deads1திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையில் மீண்டும் இன்றைய தினம் 27 வது தடவையாக குறித்த மனித புதை குழியின் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது மேலும் ஐந்து மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் தொகை 75 ஆக அதிகரித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply