நாம் பயங்கரவாதிகள் அல்ல’ – விக்னேஸ்வரன்

vickneswaran7நாம் பயங்கரவாதிகள் கிடையாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தை பயங்கரவாதப் பகுதியாக நோக்குவதனை இலங்கையின் மத்திய அரசாங்கம் கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாணத்திற்கு போதியளவு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கை பயங்கரவாத மாகாணமாக அடையாளப்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply