பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை நிறுத்தம்-

pakistan-flagபாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலிபானுக்குமிடையே இடம் பெற்று வந்த பேச்சு வார்த்தை, இருபத்தி மூன்று ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதையிட்டு, இடை நிறுத்தப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் சிறைச்சாலைகளில் தலிபான் கைதிகள் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையே, இந்த 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையென தலிபான் இயக்கம் கூறுகிறது.

June 2010 இல் எல்லைக் காவலிலீடுபட்டிருந்த 23 ராணுவ வீரர்கள் தலிபானால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். ராணுவ வீரர்கள் தலிபானால் கொல்லப்பட்டதையடுத்து, பாக்கிஸ்தான் ராணுவம் நடாத்திய குண்டு வீச்சில் 40ற்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலிபான் இயக்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துபவரில் ஒருவரான மெளலான அசிஸ் என்பவர், குறானும், ஷாரியாவும் பேச்சுவார்த்தைகளின் வரம்புகளையும், திட்டங்களையும் வடிவமைக்க வேண்டுமென்றும், அதுவரை பேச்சு வார்த்தைகளில் தான் சமூகமளிப்பது சாத்தியமற்றதெனவும் குறிப்பிட்டமைக்கு, பாக்கிஸ்தான் அரசு சட்ட ஒழுங்கு மாற்றத்திற்கு முழுமையான மறுப்புத் தெரிவித்துள்ளது.

நடை முறையில் இருக்கும் சட்டதிட்டங்களைத் தலிபான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது பாக்கிஸ்தான் அரசின் முக்கிய அதிகார வேண்டுகோளாகும்.

ஷாரியா என்பது குரானை அடிப்படையாகக் கொண்ட, இஸ்லாம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளாகும். இதில் ஐரோப்பிய, ஜேர்மன் சட்டங்களில் காணப்படுவது போன்று குடும்பச்சட்டம், தண்டனைச்சட்டம், வாரிசுக்கான சொத்துருமைச்சட்டம் போன்றன கிடையாதென்பதும், பதிலாக சமய சம்பந்தமான கடமைகளும், பிரார்த்தனை முறைமைகளும், சமய சடங்குகள் பற்றிய விபரங்களுமே உள்ளடக்கப்பட்டு சமூகம் சக மனிதர்களோடு உறவாடுவதற்கான ஒரு சில வழிகளும் பேசப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply