நானும் தண்டனை அனுபவித்து வருகிறேன் – நளினி மகள் உருக்கம்

nalini-doughterஎன் பெற்றோரை மன்னிக்க வேண்டும்,´´ என, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற, முருகன்- நளினி தம்பதியின் மகள், ஹரித்ரா, (22) கோரியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற முருகன் மற்றும் நளினி இருவரும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களுடைய மகள் ஹரித்ரா. வேலூர் சிறையில், பிறந்த ஹரித்ரா, இரண்டு ஆண்டுகள் தாய் நளினியிடம் வளர்ந்தார். கடந்த 2005ல், பிரிட்டனில் குடியேறினார். இப்போது, லண்டனில், மருத்துவம் படித்து வருகிறார்.

முருகன், நளினி உள்ளிட்டோரை, தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹரித்ரா, தனியார், ´டிவி´க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தந்தையை இழந்த ராகுலின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜிவ் கொலை வழக்கில், என் பெற்றோர் அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்டனர். மன்னிப்பு பெற அவர்கள் தகுதியானவர்கள், அவர்களை மன்னித்து விடுவிக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாக பெற்றோர் இருந்தும், அவர்களுடன் வாழ முடியாமல் நானும் தண்டனை அனுபவித்து வருகிறேன். என் பெற்றோர் தவறு செய்திருந்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டனர்.

என் பெற்றோர் விடுதலையானால், வேலூர் சிறையிலிருந்து, அவர்களை வரவேற்று, லண்டனுக்கு அழைத்து செல்வேன். இவ்வாறு ஹரித்ரா கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply