காதலனை தாக்கி காதலி பலாத்காரம் – பரபரப்பு சம்பவம்

Sexual-Abuse8தஞ்சை அருகே அம்மாபேட்டையை சேர்ந்தவர் பிரபு. ஆட்டோ டிரைவர். சாலியமங்கலம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் ஓவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்துவருகிறார். அப்போது பிரபுவுடன் ஓவியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பிரபு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு பிரபு ஓவியாவை அழைத்துச்சென்று அம்மாபேட்டையில் உள்ள தனது நண்பன் வீட்டில் தங்கவைத்தார்.

பின்னர் இன்று அதிகாலை காதலியை பைக்கில் அழைத்துக்கொண்டு சாலியமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

கொட்டைமேடு என்ற இடத்தில் வந்தபோது திடீரென 3பேர் பைக்கை வழிமறித்து பிரபுவின் கை, கால்களை கயிறால் கட்டிபோட்டுவிட்டு, அவரது காதலியை அப்பகுதியில் இருந்த பம்புசெட்டுக்கு தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை பொலிஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் 3 பேரையும் தேடிவருகின்றனர்.

காதலனை கட்டிப்போட்டுவிட்டு காதலியை 3பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , , ,

Leave a Reply