தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நாட்டின் வெற்றியை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை இந்த கண்காட்சியின் ஊடாக பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டியவில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்காட்சி நடத்தப்படும் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் சகல விதமான அழுத்தங்களையும் எதிர்நோக்கத் தயார் என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒர் நிறுவனத்தை தவிர ஏனைய அனைத்து நிறுவனங்களும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியை வரவேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
















