மரணமடைந்த கணவரின் கரத்தை பற்றிய படியே உயிர் நீத்த மனைவி

husban and wifeஅமெரிக்காவின் நியூயார்க் நகரின் பட்டாவியா என்ற பகுதியில் 83 வயது Ed Hale, மற்றும் அவரது 82 வயது மனைவி Floreen Hale அவர்களும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 7ம் திகதி கணவர் Ed Hale, மரணம் அடைந்தார். மரணம் அடைந்த அதிர்ச்சியில் மனைவிக்கு தீடீர் உடலநலக்கோளாறு ஏற்பட்டது.

நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனையில் Floreen Hale அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவரின் உடலை அவர் தகனம் செய்ய அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் தன் அருகிலேயே கணவரின் பிணத்தை வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைப்படி மருத்துவர்கள் கணவரின் பிணத்தை அவருடைய படுக்கைக்கு அருகில் வைத்திருக்க ஒப்புக்கொண்டனர்.

இரவு முழுவதும் இறந்த கணவரின் பிணத்தை கையை பிடித்துகொண்டே இருந்தவர் காலையில் மருத்துவர்கள் வந்து பார்க்கும்போது மனைவியும் உயிர் போயிருப்பதை அறிந்தனர்.

60 வருட பிரியாத தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்த தம்பதிகள் மரணத்திலும் பிரியாமல் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் உள்பட அனைவரும் அதிசயம் அடைந்தனர். அவர்களுடைய ஒரே மகள் தனது பெற்றோர்களின் மரணத்தை அறிந்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Tags: , ,

Leave a Reply