இங்கிலாந்து நாட்டின் மிஸ் இங்கிலாந்து மற்றும் மிஸ் Bolton பட்டம் வென்ற உலகின் மிகச்சிறந்த அழகிகளில் ஒருவரான Kristina Long என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவரை மோதிய குற்றத்திற்காக ஒருவருடம் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இந்த தீர்ப்பால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 26 வயது Kristina Long என்பவர் குடிபோதையில் தனது காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
அவர் Manchester city centre என்ற இடத்தின் அருகே வந்தபொது David Robinson என்ற 53 வயது நபர் மீது பயங்கரமாக மோதியுள்ளார். David Robinson அவர்களுக்கு உடலின் பல பாகங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளார்.
இங்கிலாந்து பொலிஸார் Kristina Long மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கின் விசாரணை கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. விசாரணையில் Kristina Long ஏற்கனவே ஒருமுறை விபத்து ஒன்றை ஏற்படுத்தி டிரைவிங் செய்யும் உரிமையை இழந்துள்ளது
விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோதமாக குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை விபத்துக்குள்ளாகிய இந்த உலக அழகிக்கு ஒருவருடம் சிறைத் தண்டனை கொடுத்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை கேட்டதும் Kristina Long கண்ணீர் விட்டு அழுதார். மிஸ் இங்கிலாந்து மற்றும் மிஸ் போல்டன் விருது வென்ற அழகிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை கிடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
















