ரம்யாவை கடத்தி கல்யாணம் செய்வேன் – நடிகர் பரபரப்பு

ramyaகன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ரம்யா. தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் நின்று எம்.பியானார். அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூரில் ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை ரம்யாவை கடத்தி திருமணம் செய்வேன் என்ற போஸ்டர்தான் அந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹச்சா வெங்கட் (பைத்திய வெங்கட்) என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில், ‘ரம்யா என்னுடைய உணர்வுகளை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். என் காதலை நீ ஏற்றுக் கொள்கிறாயோ இல்லையோ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த வாரம் உன்னை கடத்தி சென்று பனாசங்கரி கோயிலில் தாலி கட்ட போகிறேன்.

இதை தடுக்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது என்று பார்த்து விடுகிறேன் என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் இருந்ததால் பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவியது.

இதுகுறித்து ரம்யா புகார் எதுவும் கொடுக்கவில்லை எனினும் பொலிசார் தாங்களாகவே வழக்கு பதிவு செய்தனர். இந்த போஸ்டரை கன்னட நடிகர் வெங்கட் என்பவர்தான் ஒட்டினார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரை கைது செய்ய பொலிஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Tags: , , ,

Leave a Reply