ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவித்தால் வடக்கு ஆயுதக் குழுக்களுக்கு தலைமையேற்பர்; சிங்கள ஊடகமான மெளபிம கூறுகிறது

rajiv merdarராஜுவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவித்தால் அவர்கள் இலங்கைக்கு வந்து வடபகுதியில் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்குத் தலைமை தாங்குவர் என்றும் இதனால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் சிங்கள ஊடகமான மெளபிம தெரிவித்துள்ளது.

குறித்த ஊடகத்தின் வாராந்தப் பதிப்பின் தலைப்புச் செய்தியாக இதனை வெளியிட்டுள்ளதுடன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் இருப்பது போன்று படமும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேரையும், தமிழக அரசின் தீர்மானத்துக்கு அமைவாக விடுவித்தால் அது இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன், றொபேர்ட் ஆகிய நால்வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள். இவர்களை தமிழக அரசின் தீர்மானத்தின் பிரகாரம் விடுதலை செய்தால், இந்திய அரசின் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் பிரகாரம் இந்தியாவில் வைத்திருக்க முடியாது.

இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அவர்களை இலங்கை ஏற்காமலும் விடமுடியாது.
தற்போது வடக்கில் 6 ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான 4 பேரும் வடபகுதிக்குச் செல்வார்களாக இருந்தால் மேற்படி ஆயுதக் குழுக்களுக்கு தலைமை தாங்குவார்கள். இதனால் மீண்டும் பிரச்சினை தோன்றும் என்று குறித்த சிங்கள ஊடகம் “அரசியல் அவதானி களை’ மேற்கோள்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply