13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள்ளேயே மாகாண சபைதீர்மானங்களை மேற் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு அப்பால் பேசக் கூடாதென்றும் மத்திய அரசு எதிர்பார்ப்பது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் புரிந்துணர்வு எத்தகையது என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளதாகச் சாடியுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன், மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வில் மக்களின் போக்குவரத்து வசதிகள் கருதியும் வர்த்தக மற்றும் வாழ் வாதார வசதிகள் கருதியும் பலாலி விமானத் தளத்தை 80 ஆம் ஆண்டுக்கு முன்னரைப் போன்று சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தளமாக செயற்படுத்த மத்திய அரசைக் கோரி மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தீர்மானம் முன்மொழிந்திருந்தார்.
இதே பொருளாதார காரணங்களுக்காகக் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள ஒரு வர்த்தகத் துறைமுகமாக மத்திய அரசால் செயற்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் என்னால் முன்மொழியப்பட்டிருந்தது.
ஏகமனதாக நிறைவேற்றம்
இவ்விரண்டு தீர்மானங்க ளும் ஏகமனதாக நிறைவேற் றப்பட்டிருந்தது. 38 உறுப்பி னர்களைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் ஏகமன தாக நிறைவேறிய இந்தத் தீர்மானங்களை, மக்கள் ஆணையை மதிக்கின்ற ஜன நாயக அரசு என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டியது அதன் கடமை.
ஜனநாயக உரிமை
மேலும் இந்த மூன்று விடயங் களுமே நடைமுறையில் இருந்து போர் காரணமாக நிறுத்தப்பட்டவையாகும். ஜனநாயகச் செயன்முறை யில் மக்களால் தெரிவுசெய்யப் பட்ட எந்தப் பிரதிநிதிகள் சபையும் அந்ந நாட்டின் அரசின் செயற்பாடுகள் தொடர்பாக தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் உரிமையுண்டு. இது அடிப்படை ஜன நாயக உரிமை மட்டுமன்றி ஜனநாயகக் கடமையுமாகும்.
ஆனால் இந்தத் தீர்மானங்கள் தொடர்பில் மத்திய அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய ரம்புக்வெல விடம் பத்திரி கையாளர்கள் கேள்வியயழுப்பிய போது, வடக்கு மாகாண சபைக்கு விமானசேவை மற்றும் கப்பல் சேவை தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தை யும் மேற்கொள்ளும் அதிகா ரம் கிடையாதெனவும், இது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதல்ல என்றும் எனவே வடமாகாண சபைக்கு இந்த விடயம் தொடர்பாக எதனையும் கோரும் உரிமை கிடையாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 13 ஆவது திருத்தத்தின் படி விமான சேவை மற்றும் துறைமுகங்கள் முழுமையாக மத்திய அரசுக்கே உரியன என்றும் பதிலளித்துள்ளார்.
புரிந்துகொள்ளாமை
13 ஆவது திருத்தத்தில் மாகாண அரசுக்குரிய விட யங்கள் எனக் கூறப்பட்டுள் ளவை தவிர வேறெந்த விடயங்களையும் மாகாணசபையில் பேச முடியாது அல்லது பேசக் கூடாது என்ற சாரப்பட அமைச் சர் பதிலளித்திருப்பது ஜனநா யகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகின்றது.
இவை முழுமையாக மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட தென்றும் எனவே வடக்கு மாகாண சபை எந்தத் தீர்மா னத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்திருப்பதா னது, மத்திய அரசை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானங்களை அவர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.
அனைத் துக்கும் மேலாக இவை ஏற் கனவே நடைமுறையில் இருந்து மீள ஆரம்பிக்கக் கோரும் தீர்மானங்கள் என்பது அவ ருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
விடயஞானம் உள்ள பொறுப் புள்ள அமைச்சராக இருந்தால் வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களை மத்திய அரசு கவனத்திலெடுக்குமென்றோ அல்லது செயற்படுத்து மென்றோ பதிலளித்திருப்பார். மாறாக இலங்கையின் அண்மைக் கால வரலாறோ அல்லது ஜனநாய கம் பற்றிய அடிப்ப டைகளோ மாகாணசபை களின் உரிமை கள், கடமை களையோ புரிந்து கொள்ளாமல் அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
இத்தகை யவர்கள் மத்திய ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பது துர திர்ஷ்டமானதே, என்று சர்வேஸ் வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















