எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிக்கோபர், அந்தமான் தீவுகளில்; இந்திய ஊடகங்கள் செய்தி வெளியீடு

LTTE-Flagதமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கக் கூடும் என இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளியேறிய விடுதலைப் புலிகளுக்கு அந்தமான மற்றும் நிகோபார் தீவுகள் புகலிடமாக இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்த தீவுகளின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கையர்கள் தீவுகளுக்குள் புகுந்துள்ளதாக அந்தமான் அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் நாடுகளில் இருந்து கடந்த காலத்தில் குடியேறியவர்கள் இருக்கின்றனர். முன்னர் குடியேறியர்களை பயன்படுத்தி, குடியேறும் சாத்தியங்கள் இருக்கலாம் என் தீர்வுகளின் நிர்வாகத்தை மேற்கோள் காட்டி இந்திய உள்துறை நாடாளுமன்ற நிலையியல் குழுவின் முன் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறிய புலிகளின் உறுப்பினர் அந்தமான் தீவுகளை அருகில் இருக்கும் பாதுகாப்பான புகலிடமாக கருதியிருக்கலாம். அவர்கள் மக்கள் வசிக்காத தீவுகளை தமது தற்காலிகமான மறைவிடங்களாக பயன்படுத்திக் கொள்ள கூடும் என உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Tags: , , ,

Leave a Reply