பல்லாண்டு வாழ்க : ஜெயலலிதாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

jayalalithaமுதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தனது 66-வது பிறந்த இன்று திங்கள்கிழமை கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

அன்னை பராசக்தியின் அருளால் 66-ம் அகவையில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் (ஜெயலலிதா) எல்லா நலமும், வளமும் பெற்று, பல்லாண்டு வாழ வேண்டும் என்று பாரசக்தியைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழக பாஜக சார்பிலும் வாழ்த்துகள். இனி வரும் காலங்களில் இப்போதைவிட சிறப்பாக வாழ அருள் கூட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply